அகஸ்தியர் அருவியில் ஒரேநாளில் ரூ.85 ஆயிரம் வசூல்
2022-08-24@ 18:17:17

விகேபுரம்: அகஸ்தியர் அருவியில் கடந்த 21ம்தேதி (ஞாயிறு) ஒரே நாளில் மட்டும் ரூ.85 ஆயிரம் வசூலானது. பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை 3 நாட்கள் அரசு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியை நோக்கி படையெடுத்தனர்.
குறிப்பாக கடந்த ஞாயிற்று கிழமை அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த 21ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அகஸ்தியர் அருவிக்கு வாகனங்கள் மற்றும் பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோரிடம் நுழைவு கட்டணமாக ரூ.74 ஆயிரத்து 880ம், கேன்டீன் ரூ.10 ஆயிரம் மற்றும் கயல் பூங்கா மூலமாக ரூ.680 என மொத்தம் ரூ.85,615 வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு நபர் குளிப்பதற்கு ரூ.30, வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கியதால் 5,000 கோழிகள் தீயில் கருகி நாசம்
ரூ.24.98 கோடி நிதி ஒதுக்கீடு: வைகை அணை-பேரணை இடையே பாசன கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்படுமா?: ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்ப்பு
காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி., ஆய்வு
பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி