இன்டர்ன்ஷிப் ஆட்தேர்வு முகாம் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரிப்பு
2022-08-20@ 01:03:19

சென்னை: சென்னை ஐஐடியில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாணவர்களின் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை 32% உயர்ந்துள்ளது என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடியின் 2022-23ம் வருட மாணவர்களுக்காக இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாம் ஆகஸ்ட் 6ம் தேதி மற்றும் 13ம் தேதி ஆகிய நாட்களில் இரண்டு அமர்வுகளாக நடந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து ஹாங்காங், சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நிறுவனங்களும் வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் இன்டர்ன்ஷிப் பயிற்சிகளுக்கான எண்ணிக்கை முதல் நாளிலேயே 32% அதிகரித்து இருக்கிறது.
நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நேர்காணல் நடத்தப்பட்டு, முதன்முறையாக ஹைப்ரிட் முறையில் இந்த இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாம் நடந்துள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த முறை இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக சென்னை ஐஐடிக்கு வந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 28% உயர்ந்துள்ளது. 7 சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 15 சர்வதேச இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான வாய்ப்புகள் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட 48% அதிகரித்துள்ளது.
* பயிற்சி நிறுவனங்கள் எவை?
இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக அதிக இடங்கள் வழங்கிய நிறுவனங்கள் விவரம்:
டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் - 40 பேர்
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் - 20 பேர்
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் - 17 பேர்
கோல்ட்மேன் சாக்ஸ் - 16 பேர்
Tags:
Internship Selection Camp Chennai IIT Student Opportunity Increase இன்டர்ன்ஷிப் ஆட்தேர்வு முகாம் சென்னை ஐஐடி மாணவர் வாய்ப்பு அதிகரிப்புமேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணி; 217 பதவிகளுக்கு 35 ஆயிரம் பேர் போட்டி: 126 தேர்வு மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடந்தது
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் சூரிய ஒளி மூலம் 4725 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்: நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!