திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை
2022-08-20@ 00:56:24

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில், நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த வேலுசாமி மகள் காயத்ரி (22) எம்.பி.பி.எஸ் 5ம் ஆண்டு படித்து வரும் நிலையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இந்த மருத்துவக்கல்லூரி விடுதியின் 2வது மாடியில் காயத்திரி தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை வரை அறை நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனையடுத்து சந்தேகம் அடைந்த சக மானவிகள் இது குறித்து மருத்துவக்கல்லூரி டீன் ஜோசப் ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து காயத்ரி அறை கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பேனில் தனது துப்பட்டாவால் காயத்ரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காயத்திரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை அவர்கள் மருத்துவமனைக்கு வந்து காயத்ரி உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட காயத்திரி மன அழுத்த நோய் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது மகளுக்கு டீன் ஜோசப் ராஜ் விடுமுறை அளிக்காததால் தான் மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்து கொண்ட காயத்ரி தனது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பயிற்சி டாக்டர் தற்கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
Tags:
Tiruvarur Government Medical College female training doctor hanged herself திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி பெண் பயிற்சி டாக்டர் தூக்கிட்டு தற்கொலைமேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!