தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
2022-08-19@ 00:16:16

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் ஒடிசா அருகே குறைந்த காற்றழுத்தம் நீடிப்பதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதன்படி டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் நேற்று கனமழை பெய்தது. அதில், அதிகபட்சமாக திருவள்ளூரில் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
Tags:
In Tamil Nadu moderate rain for 2 days Meteorological Department தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை வானிலை ஆய்வு மையம்மேலும் செய்திகள்
மோட்டார் வாகன சட்டப்படி சரியாக இல்லாத நம்பர் பிளேட் 27,891 வாகனங்கள் மீது வழக்கு
மதுரவாயல் - துறைமுகம் இடையே ரூ.5, 800 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க ஒப்புதல்: சுற்றுச்சூழல் நிபுணர் குழு வழங்கியது
போஸ்டல் லைப் இன்சூரன்சுடன் எதை இணைக்க வேண்டும்?
சொத்துவரி செலுத்த தவறினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை
2ம் நாளாக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ நிகழ்வில் அரசின் நலத்திட்டங்கள் பெற மக்களை அலைக்கழிக்க கூடாது: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
அரசுப் பள்ளி மாணவியர்களின் தற்காப்பு கலை பயிற்சிக்கு ரூ.1,838 லட்சம் ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!