SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு!: மக்கள் தொகையை பெருக்க அதிபர் புதின் அதிரடி அறிவிப்பு..!!

2022-08-18@ 16:39:01

மாஸ்கோ: 10 மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவை விட 5 மடங்கு பரப்பளவு அதிகம் கொண்ட ரஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடியே 51 லட்சம் தான். ரஷ்யாவில் ஏற்கனவே மக்கள் தொகை குறைவாக உள்ள சூழலில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் வேகமாக சரிந்து வருகிறது. குறிப்பாக நடப்பாண்டில் மட்டும் குழந்தை பிறப்பு எண்ணிக்கை 4 லட்சம் சரிவு கண்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு குறைவு. 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு குறைவு.

இதனை கருத்தில் கொண்டு  ரஷ்யாவில் 10 மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ஒரு மில்லியன் ரூபிள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகை மட்டுமின்றி மதர் ஹீரோயின் என்ற பட்டமும் வழங்கப்பட்டு, ரஷ்ய கொடி பொருத்திய தங்க பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர். ரஷ்யாவில் இதுபோன்ற பரிசு அறிவிக்கப்படுவது இது முதல்முறையல்ல.

சோவியத் ரஷ்யாவாக இருந்தபோது இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஈடுகட்ட 1944ல் அப்போதைய அதிபர் ஜோசப், இதே மதர் ஹீரோயின் பரிசு திட்டத்தை செயல்படுத்தினார். அப்போது 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இப்பரிசை பெற்றுள்ளார்கள். 1991ல் சோவியத் கூட்டமைப்பு உடைந்த போது நிறுத்தப்பட்ட இப்பரிசு, உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் இவ்வேளையில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்