SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொண்டர்களை காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?.. ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி

2022-08-18@ 12:19:14

சென்னை: அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? என ஓ.பன்னிர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, ஓ.பன்னிர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை தொண்டர்களின் பிரதிநிதிகள்.

தொண்டர்கள் விருப்பத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர். யார் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்பதை யாரும் குறிப்பிடவில்லை. அதிமுகவை சிலர் தன்வசம் கொண்டுபோக நினைக்கிறார்கள். சிலர் கட்சியை தன்வசப்படுத்தும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொண்டர்களால் தேர்வு செய்யப்படவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கால் பொதுக்குழு உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட்டனர். 2017-ல் அணிகள் இணைந்த போது கட்சி விதிகளை திருத்த ஓ.பன்னீர்செல்வம் நிர்பந்தம் செய்தார். ஓபிஎஸ் நிர்பந்தம் காரணமாக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.

அதிமுக விதிகளை மாற்றவோ, பதவிகளுக்கு ஒப்புதல் தரவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டன. 2,663 பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள்; தொண்டர்கள் தான் அவர்களை தேர்வு செய்தார். ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்தை மாவட்ட செயலாளர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர். ஒற்றைத் தலைமை தொடர்பாக ஜூன் 14-ல் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை.

பொதுக்குழுவுக்கு அழைப்பு வைக்கப்பட்ட நிலையில் அனுமதி தரக்கூடாது என காவல்துறைக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அழைப்பு விடுப்பவர்தான் ஓபிஎஸ். நானும் தனது மகனும் பதவியில் இருக்க வேண்டும் என ஓபிஎஸ் நினைக்கிறார். ஒன்றிணைந்து செயல்பட ஓபிஎஸ் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் முன்னிலையிலேயே வன்முறை அரங்கேற்றப்பட்டது. ரவுடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தை சூறையாடியவர் ஓபிஎஸ். அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஆவணங்கள் அள்ளிச் சென்றவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?.

கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடும் போது அவருடன் எப்படி இனைந்து செயல்பட முடியும்? கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தால் தான் அதிமுக தோற்றது. முதலமைச்சர் வேட்பாளராக என்னை ஓபிஎஸ் ஏற்க மறுத்ததே தோல்விக்கே காரணம். கட்சியில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டால் மக்களிடம் அதிமுக மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்? 1989ல் நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு எதிராணியாக இருந்த ஜானகி அணிக்கு வேலை பார்த்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதா அணிக்கு எதிராக போட்டியிட்ட ஜானகி அணி வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஏஜென்ட்டாக இருந்தார்.

எங்களுக்கு எதிராக வந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம். மேல் முறையீட்டில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் ஓபிஎஸ் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்