3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
2022-08-18@ 00:23:25

சென்னை: தமிழகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர் பணியிடங்களில் 3 புதிய துணை வேந்தர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார். இதற்கான உத்தரவுகள் நேற்று வழங்கப்பட்டன.
இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பு: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தராக ஜி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக என்.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த 3 புதிய துணை வேந்தர்களின் நியமனத்துக்கான உத்தரவுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வழங்கினார். ஆணைகளை துணை வேந்தர்கள், ஆளுநர் மாளிகையில் நேரில் சென்று பெற்றுக் கொண்டனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை வேந்தர்கள் அந்த பதவிகளில் 3 ஆண்டுகள் நீடிப்பார்கள்.
மேலும் செய்திகள்
மோட்டார் வாகன சட்டப்படி சரியாக இல்லாத நம்பர் பிளேட் 27,891 வாகனங்கள் மீது வழக்கு
மதுரவாயல் - துறைமுகம் இடையே ரூ.5, 800 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க ஒப்புதல்: சுற்றுச்சூழல் நிபுணர் குழு வழங்கியது
போஸ்டல் லைப் இன்சூரன்சுடன் எதை இணைக்க வேண்டும்?
சொத்துவரி செலுத்த தவறினால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை
2ம் நாளாக ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ நிகழ்வில் அரசின் நலத்திட்டங்கள் பெற மக்களை அலைக்கழிக்க கூடாது: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
அரசுப் பள்ளி மாணவியர்களின் தற்காப்பு கலை பயிற்சிக்கு ரூ.1,838 லட்சம் ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!