SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணிவிழா காணும் அன்புச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!

2022-08-17@ 12:42:22

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து ட்விட்டர் பதிவில், மணிவிழா காணும் அன்புச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவதை வீழ்த்தி சமத்துவ இந்தியாவை கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல் விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திருமாவளவன் என்பது பெயர்ச்சொல் அல்ல, சனாதனத்திற்கு எதிரான வினைச் சொல். சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் போரை எல்லா தளங்களிலும் சமரசம் இன்றி நடத்தி வரும் அன்புத் தோழர் திருமாவளவன் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து, சசிகலா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, அன்பு சகோதரர் திருமாவளவன் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவர் மக்கள் பணி, சமூகப் பயணம் தொடர்ந்து தமிழ் மண்ணிற்கு ஆற்றிடவும்,  நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். திருமாவளவன் பிறந்த நாளுக்கு மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்