அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது: அடைக்கலம் அளித்த போலீஸ்காரர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு
2022-08-17@ 00:10:09

மதுரை: மதுரை விமானநிலையத்தில் நிதி அமைச்சர் கார் மீது செருப்பு வீசியது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்ணுக்கு உதவியதாக கூறப்படும் ஆயுதப்படை போலீஸ்காரர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியான மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன்உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மலர் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பினார். அப்போது, பாஜவை சேர்ந்தவர்கள் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக 6 பேரை முதற்கட்டமாக அவனியாபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய பெண் குறித்தும், அவருடன் வந்தவர்கள் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு பதிவான வீடியோ காட்சிகள் மூலம் விசாரித்து, திருமங்கலம் அருகே வாகைக்குளத்தில் பதுங்கியிருந்த மதுரை விளாங்குடியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வானை ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சி தொழிலதிபர் ஜெய் கருணா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய பெண்ணுக்கு, மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் அடைக்கலம் கொடுத்து உதவி செய்ததாக தெரிய வந்துள்ளது. அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் விஏஓவுக்கு 4 ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை
அழகியை பழக வைத்து தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் உள்பட 4 பேர் கைது: கார், பைக் பறிமுதல்
ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து டாக்டரை தாக்கி ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்த 4 பேர் கைது: துப்பாக்கி பறிமுதல்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!