SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விஸ்வாசத்துக்கு விடை கொடுத்த இலை கட்சி நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-08-17@ 00:04:07

‘‘மருத்துவர்களையே மயங்க வைத்த தாமரை தலைவரின் நடவடிக்கை பார்த்து போலீஸ் விழிபிதுங்கி நிற்கிறதாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியின் மாநில துணைத்தலைவரு, அதியமான்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பாரதமாதா கோயில் பூட்டை இவரு சமீபத்தில் உடைச்சாரு. இதனால, போலீசார் அவரை அரெஸ்ட் செஞ்சதும் மயங்கிட்டாராம். அப்புறம் மேல்சிகிச்சைக்காக மாங்கனி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க. அங்கேயும் அவருடைய ஆட்டம் அடங்கலையாம். அவரை பரிசோதித்த டாக்டர்கள், என்னென்ன டிரீட்மென்ட் வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்திருக்காங்க. இதை துணைத் தலைவரு வாங்கி பார்த்தாராம். அந்த லிஸ்டில் கரக்ஷன் போட்டு, எனக்கு இந்த ட்ரீட்மென்டல்லாம் குடுங்கன்னு கறாரா சொன்னாராம். அப்புறம் அவரு சொன்ன விஷயத்தை கேட்டு டாக்டருங்க ஆடிப்போயிட்டாங்களாம். இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் நான் சொல்கிற தனியார் ஆஸ்பத்திரியில் என்னோட பேமிலி டாக்டரை வச்சு கொடுப்பதற்கு ஏற்பாடு பண்ணுங்க என்று உத்தரவே போட்டதாக தகவல். அது மட்டுமல்லாமல் 24 மணி நேரமும் துணைத் தலைவரு போனும், கையுமாகவே இருக்காராம். கட்சிக்காரங்க கூட எப்போதும் வீடியோ காலில் பேச்சு நீடிச்சுகிட்டே இருக்குதாம். ஒரு பக்கம் டாக்டருங்களும், மறுபக்கம் போலீசுகளும் அவரு போடும் உத்தரவுகளை எல்லாம் கேட்டு விழி பிதுங்கி நிற்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசியல்ல விஸ்வாசத்தை எதிர்பார்க்கக் கூடாது என்று வைத்தியத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவரு யாரு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சிமென்ட் மாவட்டத்தில் இலை கட்சியின் மாவட்ட செயலாளராக முதல் எழுத்தான தாமரை பெயர் கொண்டவர் இருக்கிறாராம். இவர், வைத்தியானவரின் விசுவாசியாக இருந்தாராம். வைத்தியானவர் மூலம் தான் இவருக்கு சிமென்ட் மாவட்டத்திற்கான செயலாளர் பதவி கிடைத்ததாம். சேலத்துக்காரர்- தேனிக்காரர் இடையே ஏற்பட்ட உச்சகட்ட மோதலால், தனது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக வைத்தியானவரை தூக்கி எறிந்து விட்டாராம். தற்போது சேலத்துக்காரர் அணியில் தஞ்சம் அடைந்துள்ளார். கேட்டால், அரசியலில் எதுவும் நிரந்தரம். இதனால, யாரு எங்கே போனால் என்ன லாபம் கிடைக்குமோ, அதை நோக்கி ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். இதனால தான், கால ஓட்டத்துக்கு ஏற்ப நானும் சேலம் பக்கம் ஓடினேன் என்று டயலாக் பேசுகிறாராம்... இதை பார்த்து வைத்தியானவர் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘யார் மேலே புகராக குவியுதாம்... எந்த துறையாம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை ஆவின் உயர் அதிகாரி குறித்து நிறைய புகார்கள் வந்துகொண்டே இருக்குது... ஏற்கனவே, இவர் மீது பெண் ஊழியர் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில், விசாரணை நடந்து வருகிறது. இதற்கு முன்பாக, விசாகா கமிட்டி அமைத்து விசாரணையும் நடந்துள்ளது. இவர் பணிக்கு சரியாக வருவதில்லையாம். கோப்புகளில் கையெழுத்து போடுவதில்லையாம். இவர் எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் இருக்கிறாராம். இவர், தனக்கு வேண்டிய நபர்களை கைக்குள் வைத்துக்கொண்டு அன்னூர், பொள்ளாச்சி, சண்முகாபுரம், சுல்தான்பேட்டை என பல ஊர்களில் இருக்கும் பால் கொள்முதல் மையங்களுக்கு ரவுண்ட்ஸ் போகிறாராம். ஆய்வு என்ற பெயரில் கமிஷன் அள்ளுகிறாராம். இதனால் தான் இவரை ஆபீசில் பார்க்க முடிவதில்லையாம். இவரது கரன்சியால், இவரது பாக்கெட் வேகமாக நிரம்பி வருகிறதாம். ஆனால், கோவை ஆவின் நிர்வாகத்தில் வராக்கடன் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதை வசூலிக்க, இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம். இதனால், வராக்கடன் ரூ.3 கோடி வரை உயர்ந்துவிட்டதாம். பால் உபபொருட்கள் ஆர்டர் நிறைய வந்தாலும், அவற்றை குறித்த நேரத்தில் சப்ளை செய்வதில்லையாம். இப்படி தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதால் கோவை ஆவின் நிர்வாகம் கடனில் தத்தளிக்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மதுரை மண்ணின் வாசத்தை பற்றிச் சொல்லுங்க கேட்போம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் சவுடு மண் அள்ள அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. ‘கடற்கரையோர’ மாவட்டத்தில் சவுடு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இலைக் கட்சியின் கடந்த கால ஆட்சியில் ‘மரியாதையில் துவங்கும்’ ஊரில் இளைஞரணியில் இருந்த ‘மதுரையை ஆண்ட மன்னர்’ பெயர் கொண்டவர், ரூ.2 கோடி வரை ஆற்றுமணல் கொள்ளையில் சம்பாதித்து ‘வடமாநில நதி பெயரில் துவங்கும்’ மாவட்டத்தின் ஒரு ஊரில் ரூ.1 கோடிக்கும் அதிக செலவில் வீடு கட்டினாராம். இதுஒருபுறமிருக்க இப்போதும், இலைக்கட்சி ஆதரவாளரான ‘திருச்செந்தூர் பெருமான்’ பெயர் கொண்ட ‘உயர்மட்ட அதிகாரி’யானவர், ரூ.30 ஆயிரம் பெற்றுக் கொண்டு முழு விசுவாசத்துடன் சவுடு மண் அள்ள வாய்மொழி உத்தரவில் அனுமதி தந்திருக்கிறாராம். தகுதியானவர்கள் எல்லாம் புறம்தள்ளப்பட்டு, பழைய இலைக்கட்சி விசுவாசத்தில் நடந்திருக்கிற இந்த அனுமதிக்கு, நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் சில இலைக்கட்சியினருக்கான அனுமதிக்காக வசூலில் இருக்கும் இந்த அதிகாரியானவர் மீது மாவட்ட தலைமைக்கு புகார்கள் குவிந்து, இப்போது விசாரணை வேகமடைந்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்