கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ.. வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒடிங்கா நூலிழையில் தோல்வி..!!
2022-08-16@ 11:41:03

நைரோபி: கென்யாவின் புதிய அதிபராக ரூட்டோ வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடைய எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் தலைநகர் நைரோபியில் பதற்றம் நிலவுகிறது. கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல்வாதியுமான ரெய்லா ஒடிங்கா 2%வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். துணையாதிபராக இருந்த ரூட்டோ அதிபராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒடிங்காவின் ஆதரவாளர்கள் தலைநகர் நைரோபியில் உள்ள கேபேரா பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தை கலைக்க முயன்றனர். முன்னாள் பிரதமர் ஒடிங்காவின் ஆதரவாளர்கள் சாலைகளில் டயர்களை கொளுத்தி, தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். போராட்டத்தை தடுத்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மறுபுறத்தில் ரூட்டோவின் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். நைரோபி நகரம் முழுவதும் ரூட்டோவின் ஆதரவாளர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவு
சிலி நாட்டில் வெப்பக்காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 13 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம் என தகவல்
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.59 கோடியாக அதிகரிப்பு.! 67.69 லட்சம் பேர் உயிரிழப்பு
கடும் நெருக்கடிகளை தருகிறது ஐஎம்எப் மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு
எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு
கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கைக்கு 2 வருட விலக்கு: சீனா உறுதி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!