இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து: 3ம் தரப்பு தலையீடு இருப்பதாக ஃபிபா நடவடிக்கை...
2022-08-16@ 11:00:52

டெல்லி: 3ஆம் தரப்பிலிருந்து தலையீடு அதிகபடியாக இருப்பதன் காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா நடவடிக்கை எடுத்துள்ளது. ஃபிபா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 3ஆம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உடனடியாக சஸ்பேண்ட் செய்வது என ஃபிபா கவுன்சில் ஒரு மித்த முடிவு எடுத்ததாக கூறியுள்ளது. இந்த தலையீடானது ஃபிபா அமைப்பின் விதிகளை மீறிய செயல் என கருதப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற அக்டோபர் 11 தேதி முதல் 30 தேதி வரையில் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்ட 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை போட்டியில் திட்டமிட்ட படி இந்தியாவில் நடத்தப்பட இயலாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் தோன்றுமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஃபிபா மதிப்பீடு செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளதாகவும் இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு எட்டப்படலாம் என்று நம்புவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஃபிபா சஸ்பேண்ட் நடவடிக்கை காரணமாக சர்வதேச போட்டிகளில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்க இயலாது. மேலும் உள்ளூர் போட்டிகளுக்கு ஃபிபா அங்கீகாரம் கிடைக்காது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பீர்பால் பட்டேல் தமது பதவி காலத்திற்கு பிறகும் பணியில் நீடித்ததே பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சைனையில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வாகம் செய்ய கடந்த மே மாதம் குழு ஒன்றை அமைத்தது.
மேலும் செய்திகள்
சர்வதேச கிரிக்கெட் முரளி விஜய் ஓய்வு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்
சி ல் லி பா யி ன் ட்...
டென்னிஸ் தரவரிசை மீண்டும் முதலிடத்தில் நீடிக்கிறார் ஸ்வியாடெக்
இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு
சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை: 2வது இடத்திற்கு சபலென்கா முன்னேற்றம்.! ஆடவரில் ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!