பக்தர்கள் 40 மணிநேரம் காத்திருக்க 50 ஆதரவாளர்களுடன் தரிசனம் செய்த அமைச்சர்: திருப்பதியில் கடும் விதிமீறல்
2022-08-16@ 01:01:46

திருமலை: திருப்பதியில் அமைச்சர் 50 ஆதரவாளர்களுடன் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 நாட்களாக ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 40 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன்பு தேங்காய் உடைத்து விட்டு சொந்த ஊர் செல்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் 21ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்தது.
இருப்பினும், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உஷாஸ்ரீ சரண் நேற்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏராளமான ஆதரவாளர்களுடன் சென்றார். அதுமட்டுமின்றி விஐபி தரிசனத்தில் புரோட்டோகால் தரிசனத்தில் 50 டிக்கெட்டுகள் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார். இதற்கு, தலைமை செயல் அதிகாரி தர்மா மறுத்ததால், 15 பேருக்கு மட்டுமே புரோட்டோகால் தரிசனம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 35 பேருக்கு பிரேக் தரிசனம் வழங்கப்பட்டது.
ஏற்கனவே, கடந்த வாரம் கால்நடைத்துறை அமைச்சர் அப்பலராஜூ வந்தபோது, தனது ஆதரவாளர்கள் 150 பேருடன் விஐபி தரிசனத்தில் அழைத்து சென்றார். இதனால், பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சரிடம் நிருபர்கள் கேட்க முயன்றபோது, அவரது பாதுகாவலர்கள் அமைச்சரிடம் செல்லாத வகையில் தடுத்து நிறுத்தினர்.
மேலும் செய்திகள்
விவசாயிகள் ஆளும் காலம் வந்து விட்டது: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சு
பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கண்டனம்
பணமதிப்பிழப்பு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு
ஆன்லைன் சூதாட்டம், கடன் சேவை 232 சீன ஆப்களுக்கு ஒன்றிய அரசு தடை
நாட்டின் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை: பிரதமர் மோடி பேச்சு
சபரிமலையில் மலை போல் குவிந்த நாணயங்கள் எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது: 520 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!