SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்ப்பப்பை புற்றுநோயால்; ஹாலிவுட் நடிகை மரணம்

2022-08-16@ 00:57:51

நியூயார்க்: கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகை ராபின் கிரிக்ஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பென்சில்வேனியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை ராபின் கிரிக்ஸ் (49) கடந்த மாதம் வெளியிட்ட பதிவில்,‘எனது கல்லீரலில் இரண்டு புதிய கட்டிகள், வயிற்று தசையில் ஒன்று மற்றும் வலதுபக்க நிணநீர் முனையில் பெரிய கட்டிகள் உள்ளன’என்று தெரிவித்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மேலாளர் வெளியிட்ட அறிவிப்பில்,‘கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ராபின் கிரிக்ஸ் காலமானார்.

‘ஒன் லைஃப் டு லைவ்’,‘அனதர் வேர்ல்ட்’போன்ற படங்களில் நடித்த இவர், திகில் படங்களில் நடித்து பிரபலமானவர்’என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அவரது தந்தை ராபின் வெளியிட்ட பதிவில்,‘நேற்றுடன் அவர் அந்த காப்பகத்தில் (மரணம்) நுழைந்தார். மிகுந்த உறுதியுடனும், வலிமையுடனும் தனக்கு ஏற்பட்ட நோயுடன் அவர் போராடினார். கடினமான இந்த நேரத்தில் அவருக்காக பிரார்த்திப்போம்’என்று குறிப்பிட்டு இருந்தார். நடிகை ராபின் கிரிக்ஸ்யின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்