SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

2022-08-15@ 10:14:27

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசிய கொடியை  ஏற்றினார். சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி, தியாகிகள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்தார். நாட்டின் 76வது சுதந்திர தினம்  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

காலை 8 மணி முதலே நிகழ்ச்சியில் பங்கேற்க எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு  மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். பின்னர் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல் துறை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். முதல்வராக பதவியேற்று இரண்டாவது முறையாக அவர் தேசியக் கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து, தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு வகையான விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கினார். விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்தனர். சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பழமைவாய்ந்த முக்கிய கட்டடங்கள் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்