பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்
2022-08-15@ 05:07:09

மும்பை: சிவசேனா அதிருப்தி அணியின் தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, கடந்த ஜூன் 30ம் தேதி மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக பாஜ,வின் மூத்த தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பேற்றார். ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த 9ம் தேதி அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவருக்கும் நேற்று இலாகாக்களை முதல்வர் ஷிண்டே ஒதுக்கினார். நகர்புற வளர்ச்சி துறையை தன்னிடம் வைத்து கொண்ட ஷிண்டே, பட்நாவிசுக்கு முக்கிய துறைகளான உள்துறை, நிதி மற்றும் திட்டம் ஆகியவற்றை ஒதுக்கி உள்ளார். மேலும், பாஜ.வை சேர்ந்தவர்களுக்கு அனைத்து முக்கிய துறைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம், இம்மாநிலத்தில் ஷிண்டே முதல்வராக இருந்த போதிலும் பாஜ.வின் ஆதிக்கமே நிலவுகிறது என்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும் செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
இபிஎஸ் போல் பாஜவை தவிர்த்த ஓபிஎஸ்‘தேசிய ஜனநாய கூட்டணி’ என பேனர்: மானத்தை வாங்குறாங்களே என்று குமுறும் நிர்வாகிகள், தொண்டர்கள்
ஓபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர் உட்பட 16 பேர் வேட்பு மனு தாக்கல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!