SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.46 கோடியை தாண்டியது.! 64.53 லட்சம் பேர் உயிரிழப்பு

2022-08-14@ 07:38:44

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56.77 கோடியை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59.46 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,46,97,603 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 567,702,380 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 6,453,474 பேர் உயிரிழந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்