திருப்பதி கோயிலில் பிளாக்கில் தரிசன டிக்கெட் விற்ற 6 பேர் கைது
2022-08-14@ 00:17:01

திருமலை: திருப்பதியில் தரிசன டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற தேவஸ்தான கண்காணிப்பாளர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முறைகேடாக டிக்கெட் பெற்று, பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுனாவும், சில ஊழியர்களும் இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிந்தது. 760 விஐபி தரிசன டிக்கெட், 350 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், 25 சுப்ரபாதம் சேவை டிக்கெட்டுகள் மற்றும் 32 அறைகள் பெற்று பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு இவர்கள் விற்றுள்ளனர். இதில், பல லட்சம் ரூபாய் கைமாறியது. இந்த மோசடி தொடர்பாக மல்லிகார்ஜுனாவும், அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
Tags:
Tirupati Temple Block darshan tickets 6 people arrested திருப்பதி கோயில் பிளாக்கில் தரிசன டிக்கெட் 6 பேர் கைதுமேலும் செய்திகள்
புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: புதுச்சேரி அரசு உத்தரவு..!!
காங்கிரசில் இருந்து பெண் எம்பி சஸ்பெண்ட்
ஜம்முவில் 37 இடங்களில் சிபிஐ சோதனை
பிப்ரவரி 24 முதல் 26 வரை சட்டீஸ்கரில் காங். மாநாடு
ரூ.16,133 கோடி வட்டிக்கு ஈடாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை பெற ஒன்றிய அரசு ஒப்புதல்
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!