ராகுல் காந்தி மீண்டும் தலைவராக விருப்பம்: செப். 5ல் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல்? விரைவில் காரிய கமிட்டி கூடுகிறது
2022-08-13@ 21:51:14

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடத்துவதற்கான முன்மொழிவு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை எதிர்கொண்டதால், அப்போதைய தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் இன்று வரை காங்கிரஸ் கட்சியின் முழுநேரத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை ராகுல்காந்தி வெளியிட்டு வருகிறார்.
அதேநேரம் ஜி-23 தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவர் நியமனம் செய்ய வேண்டும், கட்சியை வலுப்படுத்த வியூகங்களை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையே ஜி-23 தலைவர்களில் ஒருவரான மூத்த தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்போது உட்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாக உள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் தலைவரின் ஐந்தாண்டு பதவிக்காலம் செப்டம்பர் 20ம் தேதிக்குள் முடிவடைவதால், அதற்குள் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியது. அதனால் தலைவர் பதவிக்கான தேர்தல் நாள் ெநருங்கி வரும் வேளையில், கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பதும், கட்சியை யார் வழிநடத்துவது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைமை வட்டாரங்கள் கூறுகையில், ‘கட்சியின் தலைமையை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. ஆனால் சில தலைவர்கள் ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைவராக வருவதை எதிர்க்கின்றனர். விரைவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்படும். அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். வரும் 20ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவும், செப்டம்பர் 3ம் தேதிக்குள் வேட்புமனுவை திரும்பப் பெறவும், செப்டம்பர் 5ம் தேதி தேர்தலை நடத்தவும் முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான விபரங்கள் செயற்குழு முன் வைக்கப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்
காஷ்மீர் மக்கள் எனக்கு கையெறி குண்டுகளை கொடுக்கவில்லை; மாறாக அன்பை கொடுத்தனர்: ஸ்ரீநகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!