திருத்தணி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் பிடிபட்டனர்
2022-08-13@ 01:37:55

திருத்தணி: திருத்தணி அருகே திருவாலங்காடு கிராமத்தின் வழியே ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் மேற்பார்வையில் திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐ பூபாலன் தலைமையில் போலீசார் திருவள்ளூர் - அரக்கோணம் சாலையில் உள்ள பழையனூர் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிறிய ரக லோடு வேனை போலீசார் மடக்கிடனர்.
இந்த சோதனையில், தலா 30 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, திருநின்றவூரை சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் (25), மற்றும் தினகரன் என்பவரது மகன் பெருமாள் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்திய லோடு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் திருவள்ளூர் மாவட்ட உணவுபொருள் கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!