கீழ் சிட்ரபாக்கம் கிராமத்தில் மாத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
2022-08-13@ 01:21:19

ஊத்துக்கோட்டை: கீழ் சிட்ரபாக்கம் கிராமத்தில் மாத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கீழ் சிட்ரபாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், மாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. அன்று காலை விக்னேஸ்வர பூஜை, புன்யாக வாசபூஜை, மகா கணபதி பூஜையும் மாலை 5 மணிக்கு கங்காதேவியும், பூமி தேவியும் ஆலயத்திற்கு அழைத்து வருதல், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், பிரவேசபலி பூஜை முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
இதனைத்தொடர்ந்து, நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜையும், வேள்வி பூஜையும், விக்னேஸ்வர பூஜையும், பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மாத்தம்மன் கோயில் கோபுர கலசத்தில் யாக சாலையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட புனிதநீரை, கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தில் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளித்தனர். மாத்தம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மேலும், மூலவருக்கு வளையல் அலங்காரம் செய்து சுமங்கலி பூஜையும், திருவிளக்கு பூஜையும், திருமாங்கல்யம் சாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு திருவீதி உலாவும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் கும்பாபிஷேகம் முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!