உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: தமிழக மாணவர்கள் பங்கேற்பு
2022-08-13@ 01:06:09

சென்னை: ருமேனியாவில் நடைபெற உள்ள ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக மாணவர்கள் லட்சுமிநாரயணன், அனுபமா ராமசந்திரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இது குறித்து சென்னையில் நேற்று தனியார் ஸ்னூக்கர் அகடமியின் பயிற்சியாளர் எஸ்.ஏ.சலீம் கூறியதாவது: எங்கள் அகடமி தமிழ்நாடு மாநில பில்லியர்ஸ்ட் மற்றும் ஸ்நுக்கர் சங்கத்தின் அங்கீகாரத்துடன் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இப்போது எங்கள் அகடமியில் பயிற்சி பெறும் அனுபமா ராமச்சந்திரன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் ருமேனியா நாட்டிலுள்ள புகாரெஸ்ட் நகரில் ஆகஸ்டு 15ம் தேதி துவங்கும் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இதில் அனுபாமா 2017ம் ஆண்டு யு16 பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். இவர் ஸ்னூக்கர் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் தமிழக பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர். மேலும் ஜூனியர் பிரிவில் 6முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர்.
இப்போது ருமேனியாவில் நடைபெறும் போட்டியில் அனுபமா யு21 பிரிவில் விளையாட உள்ளார். அதேபோல் தனியார் பள்ளி மாணவரான லட்சுமி நாரயணன் யு18 பிரிவில் பங்கேற்கிறார்.ருமேனியாவை தொடர்ந்து அனுபாமா, அக்டோபரில் மலேசியா, நவம்பரில் துருக்கியில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கிறார்.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் வாங் ஸின்யு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் கர்நாடகா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: போராடி வென்றது மத்திய பிரதேசம்; பெங்கால் அணியும் தகுதி
சில்லி பாயின்ட்...
ரஞ்சி கோப்பை காலிறுதி 93 ரன்னில் சுருண்டது ஆந்திரா: ம.பி.க்கு வெற்றி வாய்ப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!