SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் ரெய்டு

2022-08-13@ 00:01:17

நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ரெய்டு நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து குவித்த புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்துள்ளது. ஏற்கனவே, கடந்த 22.07.2021 அன்று அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். இவருக்கு சொந்தமான 26 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இரண்டாவதாக, முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் கடந்த 10.08.201 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். மூன்று மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக மீண்டும் இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு நடந்தது.

மூன்றாவதாக, கடந்த 17.09.2021 அன்று, அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வீடு உள்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு நடந்தது. நான்காவதாக, அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் கடந்த 18.10.2021 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். ஐந்தாவதாக, முந்தைய அதிமுக ஆட்சியில் பவர்புல் பதவியான மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக பொறுப்பு வகித்த தங்கமணி வீடு உள்பட மொத்தம் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 15.12.2021 அன்று ரெய்டு நடத்தினர். எஸ்.பி.வேலுமணி வீடு போலவே இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 20.07.2022 அன்று இரண்டாவது முறையாக மீண்டும் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆறாவதாக, அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 08.07.2022 அன்று ரெய்டு நடத்தினர். சென்னை, திருவாரூர், தஞ்சை, திருச்சி என மொத்தம் 49  இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இந்த வரிசையில் தற்போது ஏழாவது நபராக நாமக்கல் தொகுதி முன்னாள் அதிமுக முன்னாள் பாஸ்கர் சிக்கியுள்ளார். இவர்கள் அனைவர்களின் மீதும் சுமத்தப்பட்ட ஒரே குற்றச்சாட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது. ஒவ்வொரு ரெய்டின் போதும் பல கோடி ரூபாய் பணம், ஆவணம் மற்றும் ஆபரணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவை அனைத்தும் தற்போது, விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கு அனைத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு, விரைவில் கைது நடவடிக்கை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும், மக்களிடம் ஒரு வாக்குறுதி அளித்தார். அதாவது, ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதிமுக ஊழல் அமைச்சர்களின் வீடு மற்றும் பினாமி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு, முறைகேடாக குவிக்கப்பட்ட சொத்து, பணம், நகை என எல்லாம் பறிமுதல் செய்யப்படும். இவை, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, மீண்டும் அரசு கஜானாவில் சேர்க்கப்படும். மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே வந்து சேரும்’’ என்பதுதான் அந்த வாக்குறுதி. அதை நிறைவேற்றும் வகையில், தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர் ரெய்டு நடந்து வருகிறது. இந்த ரெய்டு, மாஜி அமைச்சர்கள் பலரையும் மற்றும் அவர்களை சார்ந்த பல வி.ஐ.பி.க்களையும் திக்குமுக்காட வைத்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்