பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு
2022-08-13@ 00:01:03

சென்னை: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுகளை எதிர்த்து மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 13வது அகில இந்திய மாநாடு சென்னையில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கலந்துகொள்கிறார்.
இதுதொடர்பாக, சென்னை, பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியன் வங்கி நிர்வாகம் லாப நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. எழுத்தர்களுக்கான காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்காலிக ஓட்டுனர் இடங்கள் மற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் ஆகியவற்றை சட்டத்திற்குட்பட்டு நிறைவேற்றுவதில்லை. எனவே இந்த இரண்டு நாள் மாநாட்டில் நியாயமான கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு அவற்றை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவங்கள் தீட்டப்படும். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுகளை எதிர்த்தும், மற்ற தொழிற்சங்கங்களோடு இணைந்து போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Public Sector Bank Privatization Union Government Agitation Indian Bank Employees Federation பொதுத்துறை வங்கி தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசு போராட்டம் இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம்மேலும் செய்திகள்
லாரி மீது சொகுசு பஸ் மோதி பெண் உள்பட 2 பேர் பலி: 10 பேர் படுகாயம்
ராஜீவ்காந்தி சாலையில் ஓடும் காரில் தீ: போக்குவரத்து பாதிப்பு
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணி; 217 பதவிகளுக்கு 35 ஆயிரம் பேர் போட்டி: 126 தேர்வு மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடந்தது
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் சூரிய ஒளி மூலம் 4725 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்: நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!