குஜராத்தில் பிரபல தங்கும் ஓட்டலில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சாம்பல்.. 27 பயணிகள் பத்திரமாக மீட்பு..!!
2022-08-12@ 10:28:35

காந்தி நகர்: குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பிரபல தங்கும் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அலெண்டோ என்ற இந்த 4 தளங்களை கொண்ட ஓட்டல், அரபி கடல் ஓரம் பெரிய பெரிய தொழிட்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. நேற்று இரவு 7:30 மணிக்கு இந்த ஓட்டலின் கீழ் தளத்தில் தீ பிடித்தது. மிகவும் வேகமாக பரவிய தீ சில நிமிடங்களில் மற்ற தளங்களுக்கும் பரவியது. இதனால் அந்த ஓட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் அலறி துடித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஓட்டல் அறைகளில் சிக்கியிருந்த 27 பேரையும் பத்திரமாக மீட்டனர். கொழுந்துவிட்டு எறிந்த தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 2 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஓட்டலில் மொத்தமுள்ள 36 அறைகளில், 18 அறைகளில் பயணிகள் தங்கியிருந்தனர்.
அவர்களில் 3 பேருக்கு மட்டும் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மின் கசிவே இந்த தீ விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ஓட்டலுக்கு மிக அருகில் ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், நயாரா கேஸ் எனர்ஜி, குஜராத் மாநில உர கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. வெகு விரைவாக தீ அணைக்கப்பட்டதால் உயிர் சேதம் மட்டுமில்லாது பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திருப்பதியில் 8 மணிநேரத்தில் ஏழுமலையான் தரிசனம்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!