சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகள் பிரிக்கும் பணி தீவிரம்
2022-08-12@ 01:19:48

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக டேபிள், அரங்குகளை பிரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ரிசார்ட்டில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடந்தது. போட்டியில், 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள், நடுவர்கள், முக்கிய பிரமுகர்கள், செஸ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், 707 போர்டுகளில் வீரர், வீராங்கனைகள் செஸ் விளையாடினர். 60 செஸ் போர்டுகளுக்கு ஒரு கம்ப்யூட்டர் என 12 கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்டு ஒவ்வொரு நகர்வுகளும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணித்து பதிவு செய்யப்பட்டது. மேலும், அனைத்து பணிகளும் மேற்கொள்ள தமிழக முதல்வர் தலைமையில் 19 குழுக்கள் அமைக்கப்பட்டு, போட்டி நடைபெறும் ரிசார்ட்டில் ஏற்கனவே 22 ஆயிரம் சதுர அடியில் உள்ள பழைய அரங்கம் மற்றும் வெளிநாடுகளில் உள்ளது.
இதோபோன்று உருவாக்கப்பட்ட 52 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட புதிய அரங்கம், வாகன நிறுத்தம், மீடியா அறை, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, மருத்துவத் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, அங்கு இரவை பகலாக்கும் வகையில், அதிக வெளிச்சம் தரக் கூடிய எல்இடி விளக்கு, சிசிடிவி கேமிரா, ஏசி ஆகியவைகள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. இதேபோன்று, மாமல்லபுரம் முழுவதும் சாலைகளின் இருபுறம்பேவர் பிளாக் கற்கள் பதிப்பது, வீரர், வீராங்கனைகள் கடந்து செல்லும் வழியில் உள்ள குளம், குட்டைகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாமல்லபுரத்தில் நடந்த அனைத்து பணிகளையும் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு, அறிக்கையாக தயார் செய்து தமிழக முதல்வருக்கு அளித்து வந்தனர். இந்த நிலையில், போட்டி நடந்த ரிசார்ட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் அமர்ந்து விளையாடி டேபிள், அரங்குகள் அனைத்தும் பிரிக்கும் பணியில் வட மாநில ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி விட்டார்: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மீது ஓபிஎஸ் அணியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசில் சிக்க வைக்க கூட்டு பலாத்காரம் என புகார் அளித்த இளம்பெண்ணின் நாடகம் அம்பலம்: காவல் துறையின் விசாரணையில் உண்மை வெளியானது
வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த பிரபல ரவுடி சிறையில் அடைப்பு
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,628 பேரிடம் அபராதமாக வசூலான ரூ.1.98 கோடி: நீதிமன்ற உத்தரவின்பேரில் 319 வாகனங்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: வடபழனி, கந்த கோட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
எடப்பாடி அணி வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவாக பிரசாரம் செய்வாரா?..முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!