மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
2022-08-12@ 01:12:30

ஸ்ரீ பெரும்புதுார்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதுார் அடுத்த கிளாய் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆனந்தன் (33). இவர், ஸ்ரீ பெரும்புதுார் அருகே போந்துாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே ரத்த காயங்களுடன் ஆனந்தன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீ பெரும்புதூர் போலீசார் ஆனந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீ பெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில் ஆனந்தன் கடந்த சில தினங்களாக மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீ பெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:
மாடியில் வாலிபர் தற்கொலைமேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!