ஊழியர்களுக்கு கொரோனா அதிகரிப்பு உச்ச நீதிமன்றத்தில் மாஸ்க் கட்டாயம்: தலைமை நீதிபதி உத்தரவு
2022-08-12@ 00:15:31

புதுடெல்லி: இந்தியாவில் கணிசமாக குறைந்திருந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்த போதிலும், பெரும்பாலோர் அதை பின்பற்றுவது இல்லை. அதேபோல், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்களும், வழக்கு விசாரணைக்காக வருபவர்களும் பெரும்பாலும் முகக்கவசம் அணிவது இல்லை. இதன் காரணமாக, உச்ச நீதிமன்ற ஊழியர்கள் பலர் கொரோனாவால் பாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று முறையீடு செய்வதற்காக ஏராளமான வழக்கறிஞர்கள் குவிந்தனர். இதை கண்ட தலைமை நீதிபதி, ‘தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞர்கள் முறையீடு செய்வதற்காக அதிகளவு குவியும்போது அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அதற்கு பிறகு வாதங்களை வைக்க வேண்டும். தற்போது சூழல் சரியில்லை. முகக்கவசம் அணியாத காரணத்தால், நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இனிவரும் நாட்களில் நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் கட்டாயம் ஒரு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்,’ என உத்தரவிட்டார்.
Tags:
Employee Corona Supreme Court Mask Mandatory Chief Justice ஊழியர் கொரோனா உச்ச நீதிமன்ற மாஸ்க் கட்டாயம் தலைமை நீதிபதிமேலும் செய்திகள்
சமீபத்தில் மோடியால் தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயிலில் குப்பை: பயணிகள் மீது ஐஏஎஸ் அதிகாரி கோபம்
கவுகாத்தி உயர்நீதிமன்றத்திற்கு ‘ஜீன்ஸ் பேண்ட்’ அணிந்து வந்த வக்கீல் வெளியேற்றம்: நீதிபதி அதிரடி உத்தரவு
கொலீஜியம் குறித்த விவகாரம்; நீதித்துறை வீழ்ந்தால் நாடு படுகுழியில் விழும்!: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து
பணமோசடி வழக்கில் சிக்கிய சுகேஷை சிறையில் சந்தித்தேன்!: நடிகை சாஹத் கன்னா பகீர் பேட்டி
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை!: வெளியுறவு அமைச்சர் பேச்சு
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!