SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீரனூர் அருகே வனப்பகுதியில் 14ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு

2022-08-11@ 21:22:34

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ரகுநாதபுரம் வனப்பகுதிக்குள் கலைநயமிக்க சிற்பங்கள் கேட்பாரற்று கிடந்தது. இந்த தகவல் அறிந்ததும் தொல்லியல் துறை ஆர்வலர்களான பேராசிரியர் முத்தழகன் தலைமையில் கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் நேற்று கள ஆய்வு செய்தனர். அதில், அங்கு கிடப்பது கிபி 14ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர்களின் கற்றளி(கல் தூண்) என்பது தெரியவந்தது.

மேலும் பிற்கால பாண்டியர்களின் கலைநயமிக்க சிற்பங்கள், வேலைப்பாடு மிக்க தூண்கள், கல்வெட்டுகளுடன் கூடிய கற்கள் அப்பகுதி முழுவதும் சிதறி கிடந்தது தெரியவந்தது. எனவே இந்த கலைநயமிக்க சிற்பங்களை தொல்லியல்துறையினர் சேகரித்து அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டுமென தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்