SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் Fastag பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

2022-08-11@ 20:01:37

டெல்லி: இந்தியாவில் Fastag பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் போது ஏற்படும் டிராஃபிக்கால் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்த நிலையில் தான், அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையெல்லாம் சரிசெய்யும் விதமாகவும், வாகன ஓட்டிகளின் பணத்தையும் நேர விரயத்தைப் போக்கவும் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. அதன்படி, நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சுங்கக்கட்டணம் ஃபாஸ்டாக் மூலம் செலுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பல எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் 2 ஆண்டுகளுக்குப்பிறகு முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது.

தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் விதிகள் 2008-ன் படி, ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பம் மூலம் Fastag செயல்படுகிறது. NETC, NPCI ஆகியவை இணைந்து FASTAG எண்ணும் மின்னணு கட்டண முறையை உருவாக்கியது.RFID (Radio-frequency Identification) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் வாகனம் நிறுத்தப்படாமல் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதாவது வாகனங்களின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்டப்படிருக்கும் ஸ்டிக்கர்கள் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது, தானாக ஸ்கேன் செய்யப்பட்டு, அந்த வாகனத்துக்கான சுங்கக்கட்டணம் அதன் வங்கிக்கணக்கிலிருந்து நேரடியாகப் பிடித்தம் செய்யப்படுகிறது.

ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் Fastag குறித்து பேசுகையில்:
ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் இருந்தாலும் தற்போது மக்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது என தெரிவித்தார். குறிப்பாக இதனைப்பயன்படுத்துவதன் மூலம் விரைவாக சுங்கச்சாவடிகளைக் கடக்கவும், சில்லறை கொடுப்பதில் சிரமம் இல்லாமல் வாக்குவாதமும் தடுக்க முடிகிறது. மேலும் நீங்கள் fastag-ஐ பயன்படுத்தும் போது,உங்களது வாகனம் மட்டுமில்லாமல் பிற வாகன ஓட்டுனர்களின் எரிபொருளைச் சேமிக்க உங்களை அனுமதிக்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் Fastag பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 35 கோடி லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் வீணாவது குறைவதுடன் வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடுவை (co2) குறைத்து காற்று மாசுபாட்டைத் தடுக்க உதவியாக பாஸ்டேக் மாறியுள்ளது. குறிப்பாக தற்போது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையால் இயக்கப்படும் ஒரு புதுமையான மின்னணு கட்டண வசூல் அமைப்பாக உள்ளது. மேலும் சுங்கச்சாவடி பயனர்கள் ரீசார்ஜ் செய்வதற்கும் டாப்-அப் செய்வதற்கும் வாகன உரிமையாளரின் ப்ரீபெய்ட் கணக்கில் ஃபாஸ்ட் டேக் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த இடர்பாடுகளும் இல்லாமல் பணவரித்தனைகளுக்காக வாகனங்களை சுங்கச்சாவடிகளில் நிறுத்தாமல் வாகனங்களை இயக்க அனுமதிக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்