SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பியன் அபார்த் புன்டோ: பழசுக்கு மவுசு

2022-08-11@ 17:24:09

என்னதான் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், குறைந்த முதலீட்டில் கார் வாங்க நினைப்பவர்கள் விரும்புவது பழைய கார்கள்தான். நிறுவனம், மாடல், பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின், இதுவரை ஓடிய கி.மீ., பராமரிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப விலை மாறுபடும். தற்போதைய நிலையில் இந்தியச் சந்தையில் வாடிக்கையாளர்களிடையே அதிக ‘டிமாண்ட்’ உள்ள டாப் பழைய மாடல் ஹேட்ச்பேக் கார்கள் பற்றிய சமீபத்திய தகவல்:

பியன் அபார்த் புன்டோ: அதிகமாக விற்பனையாகும் ஹேட்ச் பேக் கார்களில் இதுவும் ஒன்று. இதில் 1.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 145 பிஎச்பி பவரையும் 212 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

போக்ஸ்வேகன் போலோ ஜிடி:
இந்த காரில் இரண்டு வகைகள் உள்ளன. 1.2 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல், எரிபொருள் சிக்கனத்துடன் கூடிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் மாடலும் உள்ளது. இது அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும் 175 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

போர்டு பிகோ: வாடிக்கையாளர்களிலேய வரவேற்பு கொண்ட கார்களில் இதுவும் ஒன்று. இதில் உள்ள 1.5 லிட்டர் விசிடி பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும் 16 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

மாருதி சுசூகி பலேனோ ஆர்எஸ் மாருதி நிறுவனத்தில் சக்கைப்போடு போடும் மாடல்களில் இதுவும் ஒன்று. இதில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் 101 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

டாடா டிகோ ஜெடிபி: டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெயம் ஆட்டோமொபைல் இடையே 50: 50 பங்களிப்புடன் தயாரானது இந்த கார். இதில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜின் உள்ளது. அதிகபட்சமாக 112பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்