தூத்துக்குடி சிவகளை 3ம் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் திறந்து ஆய்வு
2022-08-11@ 15:53:15

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை பரம்பு பகுதியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த 2020ல் முதற்கட்ட அகழாய்வு பணியும், 2021 பிப்.26ல் 2ம் கட்ட அகழாய்வு பணியும் நடைபெற்றது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் 77 முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், பெரிய, சிறிய பானைகள், பானை ஓடுகள், வெளிநாட்டு பானை ஓடுகள், நுண் கற்கருவிகள், புடைப்பு சிற்பங்கள் உட்பட அரிய வகை தொல்பொருட்கள் கிடைத்தன. ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இருந்து நெல் மணிகளும் கண்டெடுக்கப்பட்டது. நெல் மணிகளை ஆய்வு செய்ததில் 3200 ஆண்டு பழமையானது என கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து 3ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த மார்ச் 30ம் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் சிவகளை பரம்பு, மூலக்கரை ஆகிய இடங்களில் புதையிடப் பகுதியாகவும், பாராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் திரடு ஆகிய பகுதிகள் வாழ்விடப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் வட்ட சில்லுகள், வளையல்கள், பாசிமணிகள், தக்களி, முத்திரைகள், எலும்பாலான கூர்முனை கருவிகள், புகைப்பான்கள், சக்கரம், காதணிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் சிவகளை பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட 10 குழிகளில் இருந்து கண்டறியப்பட்ட 34 முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை கண்டறியும் பணி நேற்று தொடங்கியது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன், சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் ஆகியோரது தலைமையிலான குழுவினர் முதுமக்கள் தாழிகளை திறந்து அதில் இருக்கும் பொருட்களை கண்டறியும் ஆய்வு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் இருந்து கிடைக்க பெறும் பொருட்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!