புதுக்கோட்டை அருகே கண்டுபிடிப்பு கிபி 14ம் நூற்றாண்டு பாண்டியர்களின் கற்றளி, கலை நயமிக்க சிற்பங்கள்
2022-08-11@ 15:47:15

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ரெகுநாதபுரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் கிபி 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிற்கால பாண்டியர்களின் கற்றளி, இடிந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், பிற்கால பாண்டியர்களின் கலைநயமிக்க சிற்பங்கள் கேட்பாரற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது.பேராசிரியர் முத்தழகன் தலைமையில், கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் புதன்கிழமை மேற்கொண்ட கள ஆய்வில், இந்த பிற்கால பாண்டியர்களின் இடிந்த நிலை கற்றளி அடையாளம் காணப்பட்டுள்ளது.
கலைநயமிக்க சிற்பங்கள், வேலைப்பாடு மிக்க தூண்கள், கல்வெட்டுகளுடன் கூடிய கற்கள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த பிற்கால பாண்டியர்களின் கற்றளியையாவது, தொல்லியல் துறை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், கிரானைட் கற்களால் ஆன வேலைப்பாடு மிக்க பழங்கால எச்சங்கள் பாதுகாக்கப்படும். மேலும் கலைநயமிக்க சிற்பங்களை, தொல்லியல்துறை உடனடியாக அப்பகுதியில் இருந்து எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!