SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து இடியும் அபாயம் அரசு மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம் : மாணவர்கள் கோரிக்கை

2022-08-11@ 12:48:31

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மேற்கூரை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும்  சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கி படிக்க வசதியாக, குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள இடத்தில், கடந்த 1993ம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டப்பட்டது. தரைத்தளம், மேல்தளம் என இரண்டு தளங்களில் விடுதி கட்டப்பட்டது. விடுதி தொடங்கப்பட்ட சில ஆண்டுகள் வரை மாணவர்கள் அதிகளவில் தங்கி படித்து வந்தனர். நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால் விடுதி கட்டிடங்கள் முழுவதும் ஆங்காங்கே விரிசல் விட தொடங்கியது. மேலும் கட்டிடங்களில் உள்ள கான்கிரீட் மேற்கூரைகள் சிமெண்ட் கலவைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்நிலையில் குஜிலியம்பாறை, பாளையம், கூட்டக்காரன்பட்டி, சி.அம்மாபட்டி, உல்லியக்கோட்டை, சின்னமுத்தம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 25 ஆதிதிராவிட மாணவர்கள் இவ்விடுதியில் தங்கி படிக்கின்றனர். கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கு அச்சப்பட்டனர்.
இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு மட்டும் சாப்பிட்டு விட்டு தங்களது வீடுகளுக்கு மாணவர்கள் சென்று விடுகின்றனர். இதனால் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாணவர்களுக்கு புதிய விடுதி கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், விடுதி தரைதளத்தில் உள்ள கழிப்பறை, குளியலறை கட்டிடங்களில் கான்கிரீட் மேற்கூரை முழுவதும் கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழும் நிலை உள்ளது. அதே போல் விடுதி கட்டிடங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது குறித்து கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. மாணவர்கள் விடுதியில் உணவருந்த வந்து செல்லும் வேளையில், சேதமடைந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பாக அரசு விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nia-23-kerala

    பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

  • ship-22

    இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

  • putin-action-protest

    புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

  • iran_ladies

    ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

  • INS_ship

    நீண்ட சேவையில் இருந்து விடைபெற்றது INS அஜய் போர்க்கப்பல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்