SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பராமரிப்பில்லை சிதலமடைந்து கிடக்கும் நவீன ஆடுவதை கூடம்: சீரமைக்க கோரிக்கை

2022-08-11@ 12:36:57

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான நவீன ஆடுவதை கூடம் கடந்த அதிமுக ஆட்சியின் 10 வருடங்களாக பராமரிப்பின்றி சிதலமடைந்து கிடைக்கிறது. திண்டுக்கல் சந்தைபேட்டையிலிருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில்  மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. 1.4 ஏக்கர் பரப்பளவில்  முதன் முதலில் கடந்த 2007 திமுக ஆட்சியின் போது ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் நவீன ஆடுவதை கூட்டம் கட்டப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். அப்பொழுது  மிகவும் சுகாதாரமான முறையில் ஆடுவதைக்கூடம் செயல்பட்டு வந்தது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு பகுதிகளில் சுமார் 58 கறிக்கடைகள் உள்ளன. கடைகளில் இருந்து தினந்தோறும் கறிக்காக வெட்டப்படும் ஆடுகள் ஆடுவதைக்கூடத்திற்கு கொண்டு வந்து வெட்டி சுத்தப்படுத்தி சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட ஆடுகள் இங்கு அதிகமாக வெட்டப்படும். இதனால் கறிக்கடைக்காரர்கள் இரவிலேயே இங்கு  வந்து ஆடுகளை பட்டியில் அடைத்து தங்கி இருந்து காலையில் வெட்டிய கறிகளை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

இதனிடையே, ஆட்சி மாற்றத்தால் கடந்த 2013ம் ஆண்டு 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இதன் அருகிலேயே நவீன ஆடுவதை கூடம் கட்டப்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் திறந்து வைத்தார்.  கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்து வந்தது. தற்பொழுது ஆடுவதைக்கூடத்தில் சுற்றுச்சுவர் மிகவும் சிதலமடைந்து இடியும் நிலைமையில் உள்ளது. மேலும் சிதலமடைந்த ஆடு இறைச்சி கூடத்தில் எப்பொழுது இடிந்து விழும் என்ற அச்சத்திலேயே வேலை செய்து வருவதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.  பெயரளவில் மட்டும் தான் நவீன கூடம். ஆனால் உள்ளே வந்து பார்த்தால், புதர் மண்டி  சிதலமடைந்த கட்டிடம், சுகாதாரமாற்ற சூழல் நிலவு வருகிறது. மாநகராட்சிக்கு அதிக வருவாய் தரக்கூடிய இந்த ஆடுவதை கூடத்தை, இடித்துவிட்டு புதிதாக அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன ஆட்டு இறைச்சி கூடத்தை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா கூறுகையில், ‘‘மாநகராட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று நாங்கள் பதவி ஏற்று 5 மாதத்திற்குள் பொதுமக்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திட்டங்களை நிறைவாக செய்து கொண்டு வருகிறோம். கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இந்த நவீன ஆட்டிறைச்சி கூடம் மிகவும் சிதலமடைந்து புதர் மண்டி பாம்பு, பூச்சிகள் வசிக்கும் இடமாகவும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது. தற்பொழுது  ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் ஆடுவதைக்கூடம் மராமத்து பணிகளுக்காக இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெறவிருக்கும் மாமன்ற கூட்டத்தில் மன்ற பொருளாக வைக்கப்பட்டு மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று பயன்பாட்டிற்கு வரும்’’ என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்