SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுப்பொலிவுடன் செயல்படும் உழவர் சந்தைகள் 250 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் தினசரி விற்பனை : 60 ஆயிரம் நுகர்வோர் பயன்பெறுகின்றனர்

2022-08-11@ 12:19:59

சேலம்: சேலம் மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் 11 உழவர் சந்தைகள் புதுப்பொலிவு பெற்றுள்ளது. தினசரி 250 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை இடைத்தரர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் பெறும் வகையில் உழவர் சந்தைகள் கடந்த 1999ம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் 180 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான பசுமை காய்கறிகள் மற்றும் பழங்கள் நியாமான விலையில் மக்களுக்கு கிடைத்து வருகிறது. உழவர் சந்தைகளில் விவசாயிகளுக்கு தேவையான கடைகள், அடிப்படை வசதிகள் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளும் புதுப்பொலிவு பெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தினசரி 250 மெட்ரிக்டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 60 ஆயிரம் நுகர்வோர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்திருப்பதாவது: விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், பொதுமக்களுக்கு தினமும் விளையும் காய்கறிகளை குறைவான விலையில் கிடைக்கவும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் உழவர் சந்தைகள் புதுப்பொலிவுடன் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாபட்டி, ஆத்தூர், ஆட்டையாம்பட்டி, அம்மாபேட்டை, மேட்டூர், அஸ்தம்பட்டி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம் மற்றும் எடப்பாடி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்ைகளில் தினமும் 840 முதல் 1,250 விவசாயிகள், 230 முதல் 250 மெ.டன் காய்கறிகள், பழங்கள் 50 லட்சம் முதல் 60 லட்சம் வரை விற்பனை செய்கின்றனர்.

இதன் மூலம் 56,000 முதல் 60,000 நுகர்வோர்கள் பயன்பெறுகின்றனர். காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளை கண்டறிந்து, விளை பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 11 உழவர் சந்தைகளில் மொத்தம் 4,374 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.இதில் 1,477 விவசாயிகளின் பழைய அட்டைகளை புதுப்பிக்க ஆவணங்கள் பெறப்பட்டு கள ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. 1,366 பழைய அட்டைகளின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு புதிய உழவர் சந்தை அடையாள அட்டை அக்டோபர் 2022க்குள் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் கணினி விண்ணப்பம், சிட்டா அல்லது பதிவு பத்திரம், அடங்கல், புல வரைபடம், பழைய அடையாள அட்டை நகல், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் சமர்ப்பித்து பழைய அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.

சூரமங்கலம், தாதகாபட்டி, ஆத்தூர், அம்மாபோட்டை உழவர் சந்தைகளில் உள்ள குளிர்பதன கிடங்குகளில் கடந்த ஜூலை மாதம் வரை 60,442 கிலோ காய்கறி மற்றும் பழங்கள் இருப்பு வைத்து 2,796 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.உழவர் சந்தைகளில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாதகாப்பட்டி மற்றும் அம்மாபோட்டை உழவர் சந்தைகளில் ₹49 லட்சத்தில் புனரமைத்தல் பணிகளும், ஆத்தூர் மற்றும் அம்மாப்பேட்டை உழவர் சந்தைகளில் ₹22 லட்சத்தில் காய்கறி கழிவுகளிலிருந்து உரமாக்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் பண்ணையிலிருந்து நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே நேரடியாக விற்பனை செய்யும் நடமாடும் உழவர் சந்தை திட்டத்தில் புதிய 4 சக்கரவாகனம் 40 சதவீதம் மானியம் அல்லது 2 லட்சம் வண்டி, இதில் எது குறைவோ அதன்படி வழங்கப்படும். இத்திட்டத்தில் 6 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வாகனங்கள் வாங்கி மாதிரி வாகனம் போல வடிவமைக்கப்பட்டு திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது.சூரமங்கலம், அம்மாபேட்டை மற்றும் தாதகாப்பட்டி உழவர்சந்தைகளில் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய சிறப்பு அங்காடிகள் கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான பசுமை காய்கறிகள் மற்றும் பழங்கள் நியாமான விலையில் மக்களுக்கு கிடைத்து வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்