SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கையான நாட்டு காய்கறிகளை கொடுக்கும் உழவரையும், உழவர் சந்தையையும் என்றும் மறக்காதீர்

2022-08-11@ 11:49:47

திருச்சி: தமிழக வரலாற்றில் மிகச்சிறந்த திட்டமாக இருப்பது உழவா்சந்தை திட்டம் தான். இந்த திட்டத்தை துவங்கிவைப்பதற்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டா். கலைஞா் 1998ம் ஆண்டு விவசாய உற்பத்தி சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு ஒன்றை அமைத்து அந்த குழுவின் தலைவராக அன்றை காலகட்டத்தில் தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில்துறைகளின் சங்கத்தின் தலைராக இருந்த எஸ்.ரத்தினவேலுவை நியமித்தார். அந்த குழுவானது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் எப்படி விற்பனை செய்யப்படுகிறது என்ற ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் அறிக்கையை எஸ்.ரத்தினவேலு அன்று முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் கொடுத்தார்.அதில் சண்டிகர் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அங்கேயே அமா்ந்து கொண்டு நேரடியாக நுகா்வோர்களுக்கு விற்பனை செய்வதாகவும், இதே போன்ற முறை ஆந்திராவில் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார். உடனடியாக அன்று முதல்வராக இருந்த டாக்டா். கலைஞா் இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு தமிழக விவசாயிகளுக்கு என்று ஒரு நல்ல திட்டத்தை அறிக்கையாக தயார் செய்துதர உத்தரவிட்டார்.

அடுத்த ஓரிரு மாதங்களில் திட்டம் தயாரிக்கப்பட்டு ``உழவா்சந்தை’’ என்ற பெயரில் திட்டம் தயாரானது. இதன் முன்னோட்டமாக 1999ல் முதல் உழவா் சந்தையானது மதுரையில் உள்ள அண்ணாநகரில் திறக்கப்பட்டது. அதன் பின் 2000ம் ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் மொத்தம் 103 இடங்களில் உழவா்சந்தை திறக்கப்பட்டது.அதில் 1999ல் திருச்சி மாவட்டத்திற்கு என்று அண்ணாநகரில் உழவா் சந்தை திறக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்திற்கான முதல் உழவா் சந்தை என்றால் அண்ணாநகரில் அமைந்துள்ளது தான். அதன்பிறகு 2000-2002ம் ஆண்டிற்குள் 6 புதிய உழவா் சந்தைகள் திருச்சி மாவட்டத்தில் திறக்கப்பட்டன. அதில் திருச்சி மாநகர பகுதியில் அண்ணாநகா், திருவெறும்பூர், கே.கே.நகா் உள்ளிட்ட 3 இடங்களிலும், புறநகா் பகுதியான முசிறி, துறையூர், லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட 4 இடங்கள் என மொத்தம் திருச்சி மாவட்டத்திற்குள் 7 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் மண்ணச்சநல்லூரில் ஒரு புதிய உழவா் சந்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது அண்ணாநகா் உழவா் சந்தைக்கு வரும் விவசாயிகள் திருச்சி மாவட்டத்தின் 4 பகுதிகளில் இருந்து இங்கு தங்களுடைய உற்பத்தி ெபாருட்களை விற்பனை செய்ய வருகிறார்கள். அதில் இனாம்புலியூா், கோப்பு, குழுமணி, வியாழன்ேமடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒரு குழு விவசாயிகள் காலை 5 மணிக்கு இயக்கபடும் அரசு பேருந்தில் இங்கு வருவார்கள். அதேபோல் திருவெறும்பூர், பால் பண்ணை பகுதியில் இருந்து ஒரு குழு விவசாயிகளும், மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையம், துறையூா், எதுமலை, கீழபொன்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒரு விவசாயிகள் குழுவும், முசிறி கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒரு விவசாயிகள் குழுவும் என நான்கு திசைகளில் இருந்தும் காலை இவா்களுக்கு என்று இயக்கப்படும் அரசு பேருந்தில் இங்கு வந்து சோ்கிறார்கள். தற்போது இந்த உழவா் சந்தையில் மொத்தம் 163 விவசாயிகள் உறுப்பினா்களாக அடையாள அட்டை பெற்றுள்ளனா். ஆனால் இங்கு விற்பனைக்கு வருவது 80 விவசாயிகள் மட்டும் தான். அதில் 50 பெண்கள், 30 ஆண்கள் வருகிறார்கள். இவா்கள் அனைவரும் தங்களுடைய தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நாட்டு காய்கறிகளை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள். அவா்களோடு இணைந்து இங்கு உற்பத்தி செய்யப்படாத இங்கிலிஷ் காய்கறிகளை விற்பனை செய்ய சுயஉதவிக்குழுவை சோ்ந்த 13 பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டு அவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் மற்ற விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசம். இவா்களுக்கு என்று தராசு, எடைகற்கள் உள்ளிட்ட அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது.

இந்த உழவா் சந்தையானது தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றம் வேளாண் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதால், மாவட்டத்திற்கு ஒரு துணை இயக்குநா் நியமிக்கப்பட்டு, அவா்களுக்கு கீழ் ஒவ்வொரு உழவா் சந்தைக்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டத்திற்கு என்று நியமிக்கப்பட்டுள்ள துணை இயக்குநா் சரவணன் மற்றும் அண்ணாநகா் உழவா் சந்தை அதிகாரியான அனுராதா உள்ளிட்ட இருவரையும் தொடர்பு கொண்டு பேசியபோது,கொரோனா காலகட்டத்திற்கு முன்புவரை அதிகளவில் உழவா் சந்தையை தேடி பொதுமக்கள் வருவார்கள். அதிலும் அலுவலகத்திற்கு செல்பவா்கள் காலை எழுந்து நடைபயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை இங்கு வந்து வாங்கி செல்வார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 2ஆயிரத்திற்கும் அதிகமானவா்கள் வருவார்கள். சனி மற்றம் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரத்திற்கு அதிகமானவா்கள் வருவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் தள்ளு வண்டிகளிலும், இருசக்கர வாகனங்களிலும் காய்கறிகளை தெருத்தெருவாக சென்று விற்பனை செய்த பல விவசாயிகள் அதை இன்றுவரை செய்துவருகின்றனா்.

எனவே பொதுமக்களும் பலா் வீட்டை விட்டு வௌியே வராமல் தெருக்களில் வரும் விற்பனையாளா்களிடம் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொள்கின்றனா். இது இந்த உழவா் சந்தை மட்டுமல்ல திருச்சி மாவட்டத்தில் உள்ள உழவா்சந்தைகளிலும் இந்த மந்தமான நிலைதான் நீடிக்கிறது. கொரோனா காலத்திலும் உழவா் சந்தையில் இருந்து டோர் டெலிவரியும் செய்தோம். அதன்பிறகு இயல்பு வாழ்க்கை சற்று சீரானதும் அதை நிறுத்தி கொண்டோம். ஆனாலும் மக்கள் வீட்டைவிட்டு வௌியே வராாமல் வீட்டிற்கே அனைத்தும் வர வேண்டும் என்ற மனநிலைக்கு மாறிவிட்டனா்.அதிலும் தற்போது ஒவ்வொரு பகுதிகளிலும் மாலை நேர சந்தை என்பது செயல்பட ஆரம்பித்துள்ளது. எனவே இந்த மாலைநேர சந்தையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நுகர்வோர் வீட்டிற்கு அருகில் உள்ள சந்தையிலேயே தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொள்கின்றனா். இதனால் உழவா் சந்தைக்கு வரக்கூடியவா்களின் எண்ணிக்கை இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு குறைந்துள்ளது. ஆனால் உழவா் சந்தையில் வாங்கி பழக்கப்பட்ட நுகா்வோா்கள் இன்றும் இங்கு வந்து தான் வாங்குகிறார்கள். அதிலும் காலை நடைபயிற்சி செய்யவரும் பலா் இங்குவந்துவிட்டு தான் செல்கிறார்கள். எனவே மக்கள் இந்த உழவா்சந்தையை பயன்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் நேரடியாக தங்களது உற்பத்தி பொருட்களை சுத்தமானதாகவும், தரமானதாகவும் தருகிறார்கள். எனவே நல்ல நாட்டு காய்கறிகளை வாங்கி பயன்பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம் என்று கூறுகின்றனா்.

மேலும் இந்தாண்டு உழவா் சந்தைகளை புதுப்பிப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கே.கே.நகா், மணப்பாறை உழவா் சந்தைகளை தமிழக அரசு 52 லட்சம் ரூபாய் செலவில் மராமத்து பணிகள் செய்து புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு அண்ணாநகா் மற்றும் முசிறி ஆகிய இரண்டு உழவா் சந்தைகளும் 65 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்ததப்பட உள்ளது. உள்கட்டமைப்பு, விவசாயிகள் பயன்படுத்தும் தராசிற்கு பதிலாக எலக்ட்ரானிக்ஸ் தராசுகள், வழங்கப்பட உள்ளதாகவும், புதிய நுழைவாயில் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.எனவே பொதுமக்கள் உழவா் சந்தை, விவசாயிகளை மறக்காமல் வீட்டைவிட்டு வௌியே வந்து நல்ல தரமான, சுத்தமான, இயற்கையான நாட்டு காய்கறிகளை வாங்கினால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த உழவா் சந்தையும் நல்ல காய்கறிகளையும், பழங்களையும், தருவதற்கு தயாராக உள்ளது என்று கூறுகின்றனா். உழவா் சந்தைக்கு வரக்கூடிய வா்களின் எண்ணிக்கை இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு குறைந்துள்ளது. ஆனால் உழவா் சந்தையில் வாங்கி பழக்கப்பட்ட நுகா்வோா்கள் இன்றும் இங்கு வந்து தான் வாங்குகிறார்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்