SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் கட்டிடம் கட்டும் பணிகள் அடுத்த மாதம் துவங்கும்

2022-08-11@ 11:49:09

* கிராவல் மண் நிரப்பும் பணி 60% நிறைவு
* இரண்டாம் தொகுப்புக்கு இன்று டெண்டர்

திருச்சி: கனவு திட்டமான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ரூ.349.98 கோடி பணிக்கு 2 தொகுப்பாக டெண்டர் இன்று கோரப்பட உள்ளது.திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை போக்கும் விதமாக மத்திய பஸ் நிலையத்திற்கு மாற்றாக புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த திமுக ஆட்சியின்போது முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கியது. இதையடுத்து பஞ்சப்பூர் அருகே இதற்காக இடம் பார்க்கப்பட்டு அந்த இடத்தினை அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அதிமுக அரசு, பஞ்சப்பூர் இடத்திற்கு பதிலாக மத்திய சிறை அருகே 25 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.அதனை தொடர்ந்து விமான நிலைய விரிவாக்க பணி துவங்கியதாலும், அருகே சிறை இருப்பதாலும் இந்த திட்டமும் முடங்கியது. இதனிடையே திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம் மற்றும் பல்வேறு வணிக கட்டிடங்கள் என ரூ.832 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி சார்பில் பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கனரக சரக்கு வாகன முனையம், சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் இதர கட்ட மைப்பு வசதிகள், பல்வகை பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து மண் பரிசோதனை, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடந்தது. இந்த திட்டத்தினை நிறை வேற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உட் கட்டமைப்பு வசதி திட்ட பிரிவு சார்பில் ரூ.140 கோடி, மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.50 கோடி தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் சார்பில் கடன் தொகையாக ரூ.159.98 கோடி என ரூ.349.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.இதனைதொடர்ந்து கடந்த ஜூலை 6ம் தேதி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைப்பதற்காக பூர்வாங்க பணிகள் பூஜையுடன் துவங்கிய நிலையில் முதற்கட்டமாக கிராவல் மண் நிரப்பும் பணி துவங்கியது. கட்டிடம் கட்டுவதற்கு முன் தரை தளங்களை சீரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு 8 அடி உயரத்திற்கு கிராவல் மண் நிரப்பும் பணி துவங்கியது. தொடர்ந்து அடிக்கடி மண் பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைப்பதற்காக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அதிகாரபூர்வமாக டெண்டர் கோரியுள்ளது.

ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் அமைக்க ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டு ம் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்க ரூ.106.20 கோடி என 2 தொகுப்பாக டெண்டர் கோரியுள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி (இன்று) மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்படும் ஒப்பந்த புள்ளிகள் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலைக்குள் டெண்டர் விடப்பட உள்ளது. அதன்பின்னர் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடக்க உள்ளது.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் கூறுகையில், ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிக்கு ஏற்ற வகையில் தற்போது கிராவல் மண் நிரப்பி சமன்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கிராவல் மண் நிரப்புவதற்கு 3 மாதங்கள் ஆகும் என்ற நிலையில் 2 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து பைபாஸ் சாலையின் உயர்மட்டத்திற்கு ஏற்ற வகையிலும் கட்டிட கட்டுமான பணிகள் நடக்கும் பகுதிகளிலும் கிராவல் மண் நிரப்பும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை 60 சதவீத பணிகள் நடந்துள்ளது. வரும் 30 நாட்களுக்குள் மீதமுள்ள 40 சதவீத பணிகளும் முடிவடையும். மேலும், டெண்டர் கோரும் நிகழ்வும் நாளை (இன்று) நடக்க உள்ளது. அதன்பின்னர் பின்னர் பணிகள் துவக்கப்பட்டு முழுவீச்சில் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி
மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் அமைக்க ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டு ம் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்க ரூ.106.20 கோடி என 2 தொகுப்பாக டெண்டர் கோரியுள்ளது.

கட்டிடம் கட்டுவதற்கு முன்
தரை தளங்களை சீரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு 8 அடி உயரத்திற்கு கிராவல் மண் நிரப்பும் பணி துவங்கியது. தொடர்ந்து அடிக்கடி மண் பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்