SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3-வது நாளாக மசினகுடி - கூடலூர் இடையே போக்குவரத்து நிறுத்தம்.: 80 கி.மீ. வரை சுற்றி செல்வதால் மக்கள் அவதி

2022-08-11@ 10:45:58

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3-வது நாளாக மசினகுடி - கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உதகை- கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அங்கு உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கிளன்மார்கன் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் ஓடும் மாயார் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிய நிலையில், தற்போது அங்கு மழையின் அளவு குறைந்துள்ளது.

அணையில் இருந்து 2,760 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 986 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளத்தின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கருதி மசினகுடி - கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மசினகுடி ,மாயார், வாழை தோட்டம், ஆனைக்காட்டி உள்ளிட்ட 15 கிராம மக்கள் கூடலூர் மற்றும் கர்நாடக மாநிலத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்போர் கல்லட்டி மலை பாதை நடுவட்டம் வழியாக 80 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.  

ஆற்றில் தண்ணீர் குறைந்ததும், அதன் உறுதி தன்மையை பரிசோதித்த பின்பு தான் வாகனங்கள்  அனுமதிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

  • tirupati-brahmotsavam-28

    கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

  • turist_world

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

  • noru-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்