SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் ஒளிர்கிறது

2022-08-11@ 02:19:34

சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி வண்ணமயமாக துவங்கிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. சென்னையில் நடத்த அனுமதி கிடைத்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 18 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டன. பணிகள் ஜெட் வேகத்தில் நடந்தன. உடனடியாக ரூ.100 கோடி ஒதுக்கியது தமிழக அரசு. இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரிலேயே, மிகச்சிறப்பான ஏற்பாடுகள், வசதிகளுடன் நடந்தது ‘நம்ம சென்னையில் தான்’ என்ற பெயரை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

186 நாடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இந்த மெகா விளையாட்டுத் தொடரில், தமிழர்களின் தொன்மையான வரலாறு, நாட்டுப்புற பாடல், நடனம் என பல்வேறு வகையான கண்கவர் கலையம்சங்கள் கொண்ட கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிகளை தொடங்கியது மிகவும் ஹைலைட்டான விஷயம். ஒலிம்பிக், உலகக் கோப்பை கால்பந்து போன்ற மெகா விளையாட்டு திருவிழாவில் மட்டுமே நடக்கும் பிரமாண்ட துவக்க விழா நிகழ்ச்சிகளுக்கு நிகரான ஏற்பாடுகள் உலக பார்வையாளர்களின் விழிகளை வியப்பால் விரிய வைத்தன. அதேபோல் நிறைவு விழாவிலும் குறைவைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள முன்னணி இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளால் நிறைவு விழாவும் களைகட்டியது. டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணியுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் இணைந்து டிரம்ஸ் அடித்தும் விழாவை உற்சாகப்படுத்தினார்.

சிறு குறைகூட ஏற்படாத வண்ணம் தமிழக அரசு ஏற்பாடுகளை செய்தமைக்கு, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் பாராட்டு தெரிவித்துள்ளார். இனி இந்தியாவில் மிகப்பெரிய விளையாட்டு தொடரை ஏற்று நடத்த சிறந்த இடமாக தமிழகம் இருக்குமென்றும், அதற்கான வாய்ப்பை தமிழகத்திற்கு தர வேண்டுமென்றும் முதல்வர் கூறியிருப்பது பாராட்டிற்குரியது. நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வோரை உருவாக்கும் பொருட்டு, ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் நடை முறைப்படுத்தப்பட உள்ளது. தமிழக வீரர்களுக்கு பன்னாட்டு பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்’ என கூறியிருப்பது விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் ஊக்குவிப்பாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்