வகுப்பறையில் மயங்கிய பிளஸ் 2 மாணவி சாவு
2022-08-11@ 02:19:26

விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகே அரசு பள்ளி பிளஸ்2 மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அருகே மல்லிகைபட்டு கிராமத்தில் வசிப்பவர் பெருமாள், கூலி தொழிலாளி. இவரது மகள் அஸ்வினி (17) மாம்பழப்பட்டு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இவர் நேற்று காலை பள்ளி வகுப்பறையில் மாணவி அஸ்வினி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சக மாணவிகள், ஆசிரியர்கள் அருகே உள்ள காணை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவியிடம் விசாரித்தபோது, பூச்சி மருந்து குடித்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காணை போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து சக மாணவிகள், ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை: நீர்வளத்துறை அறிக்கை
பணி நியமனங்களில் முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு குழு விசாரணை தொடங்கியது.! முதற்கட்டமாக ஆவணங்கள் ஆய்வு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக ஆதரவு அளிக்கும் கட்சிக்கு ஐஜேகே ஆதரவு: பாரிவேந்தர் பேட்டி
அம்மன் கோயிலில் பொங்கல் வைக்க ஒரு பிரிவினருக்கு அனுமதி மறுப்பு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் குவிப்பு
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
மதுரையில் உள்ள திருமங்கலத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு..!!
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!