உயர்நிலை மன அழுத்தம் உள்ள 4,484 போலீசாருக்கு கவுன்சலிங்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
2022-08-11@ 00:04:46

மதுரை: உயர்நிலை மன அழுத்தமுள்ள 4,484 போலீசாருக்கு தேவையான சிகிச்சை மற்றும் கவுன்சலிங் வழங்கப்படுவதாக ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த சம்பவம் குறித்து முதலில் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, தற்ேபாதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ‘‘காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பெங்களூரு நிம்கான்ஸ் அமைப்புடன் இணைந்து காவலர்களுக்கான நல்வாழ்வுத் திட்ட முகாம் பல கட்டமாக நடத்தப்படுகிறது. மு98,531 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 41 பேர் டிப்ளமோ பயிற்சி முடித்துள்ளனர். 205 பேர் பயிற்சியில் உள்ளனர். மேலும் ஓராண்டுக்கு பயிற்சி திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 4,484 போலீசாருக்கு உயர் நிலை பதற்றம் மற்றும் மன அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை, கவுன்சலிங் மற்றும் தொடர் ஆலோசனையும் வழங்கப்படுகிறது’’ என அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:
High Level Stress 4 484 Police Counselling ICourt Branch உயர்நிலை மன அழுத்தம் 4 484 போலீசார் கவுன்சலிங் ஐகோர்ட் கிளைமேலும் செய்திகள்
புதிய தடுப்பு முகாம் அசாமில் திறப்பு: 68 வெளிநாட்டவர்கள் அடைப்பு
மூணாறில் களைகட்டும் சீசன் ஸ்ட்ராபெர்ரி கிலோ ரூ.800: அள்ளிச் செல்லும் சுற்றுலாப்பயணிகள்
அலையாத்திக்காடு, கோடியக்கரையில் 1.30 லட்சம் அரியவகை பறவைகள் கண்டுபிடிப்பு: ஆய்வு குழு தகவல்
புதுவையில் இன்று ஜி20 மாநாடு துவக்கம்: 75 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு
பாஜ கவுன்சிலர் மீது கொலை மிரட்டல் வழக்கு
பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கொடியேற்றம் பழநியில் தைப்பூச திருவிழா கோலாகல தொடக்கம்: பிப்.3ல் திருக்கல்யாணம், 4ம் தேதி தேரோட்டம்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!