தைவானை மிரட்ட நடந்த சீனாவின் போர் பயிற்சி நிறைவு
2022-08-11@ 00:04:30

பீஜிங்: சீனாவின் எச்சரிக்கையை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தைவான் வருகை தந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, தைவான் ஜலசந்தி உள்ளிட்ட 6 முக்கிய பகுதிகளில் கப்பற்படை, ராணுவம், விமானப்படை ஆகியவை ஒருங்கிணைந்த போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில், போர் பயிற்சி வெற்றிகரமாக முடிந்ததாக சீன ராணுவம் தெரிவித்தது. இது தொடர்பாக அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் நாளிதழின் டிவிட்டரில், ‘கிழக்கு பிரிவின் மூத்த கலோனல் ஷி யீ தலைமையில் தைவான் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த கூட்டு ராணுவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என ராணுவத்தின் கிழக்கு பிரிவு தெரிவித்துள்ளது’, என்று கூறப்பட்டுள்ளது.
* டூ பிளஸ் டூ ஒப்புதல்
சீனாவின் குயிங்டோ நகரில் சீனா, தென்கொரியா வெளியுறவு அமைச்சர்கள் வாங் யீ மற்றும் பார்க் ஜின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை தொடர்ந்து வினியோகிக்கவும் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சகங்களின் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் ஒப்புகொண்டன.
மேலும் செய்திகள்
ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு: 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நவாஸ் மகள் மரியம் நாடு திரும்பினார்
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது
கறுப்பின வாலிபர் பலி அமெரிக்காவில் மக்கள் போராட்டம்: 5 போலீசார் கைது
நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!