SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தி இந்தியாவிலும் இனி சாத்தியம்

2022-08-10@ 17:22:47

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை தொடர்ந்து, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. சில இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் செய்யும்போது தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லாததும் மிகப்பெரிய குறை. இருப்பினும், எரிபொருள் சிக்கனத்தை விரும்பும் பலருக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் மீது தீராத மோகம் இருக்கத்தான் செய்கிறது.  

ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களை விட மிக அதிகம். ஒரே சார்ஜில் அதிக தொலைவு செல்லக்கூடிய தரமான ஸ்கூட்டர், பைக்குகளின் விலை ஒரு லட்சத்துக்கு கீழ் கிடைப்பதில்லை. காரணம், எலக்ட்ரிக் வாகன உற்பத்தி செலவில் கணிசமான பகுதி பேட்டரிக்குத்தான் செல்கிறது. உற்பத்தி தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதுதான் இதற்கு காரணம்.

இந்நிலையில் இந்தியாவிலேயே பேட்டரி உற்பத்திக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மூன்று முக்கிய நிறுவனங்கள் ஈடுபட உள்ளன. ஓலா எலக்ட்ரிக், ரிலையன்ஸ் நியூ எனர்ஜி, ராஜேஷ் எக்ஸ்போர்ட் ஆகியவை இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ரூ.18,100 கோடி மதிப்பிலான ஒன்றிய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் மேற்கண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 95 கிகாவாட் அவர் உற்பத்தி திறன் கொண்ட பேட்டரி தயாரிப்பு ஆலைகளை இவை உருவாக்கும் என கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்