SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிக நீளமான வால்வோ சொகுசு பஸ்

2022-08-10@ 17:22:08

வால்வோ பஸ்சஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவிலேயே மிக நீளமான சொகுசு பஸ்சை அறிமுகம் செய்துள்ளது. வால்வோ 9600 என்ற இந்த பஸ், படுக்கை வசதி மற்றும் அமரும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 15 மீட்டர் நீளமுள்ள இருக்கை வசதி கொண்ட பஸ்சில் 55 பேர் பயணிக்கலாம். படுக்கை வசதியுடன் உள்ளதாக இருந்தால் 40 பேர் செல்லலாம்.

இதுபோல் 13.5 மீட்டர் நீள பஸ்சில் அமரும் வசதியுடன் 47 பேரும், படுக்கை வசதியுடன் 36 பேரும் பயணிக்க முடியும்.  வால்வோ 9600 மாடல் பஸ்களில் வால்வோ டி8கே இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 2,200 ஆர்பிஎம்மில் 350 எச்பி பவரையும், 1200 முதல் 1600 ஆர்பியும் வரை அதிகபட்சமாக 1350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.  

எலக்ட்ரானிக் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் மற்றும் அசிஸ்ட், ஒவ்வொரு 2 மீட்டருக்கும் பேனிக் பட்டன் உட்பட பல பாதுகாப்பு அம்சங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த பஸ்களின் ஷோரூம் விலை சுமார் ரூ.1.3 கோடி முதல் ரூ.2 கோடி வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan-hospital

    பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

  • temple-dubai-6

    துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்