மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு
2022-08-10@ 15:40:35

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை துவங்கியதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 1.45 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1.35 கனஅடியாக சரிந்துள்ளது. இருப்பினும் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க, பரிசல் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1.44 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 1.45 லட்சம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது.
இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக சரிந்துள்ளது. அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 1.22 லட்சம் கனஅடி வீதமும் என 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.
அணையின் நீர்மட்டம் 25வது நாளாக தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. நீர்இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஜூலை 12ம் தேதி முதல் இன்று வரை மேட்டூர் அணைக்கு 210 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. 150 டிஎம்சி வெள்ள நீர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
உதகையில் 40 ஆண்டுகளுக்கு பின் பூத்து குலுங்கும் மூங்கிலரிசி
திருப்போரூர் அருகே விளையாட்டு பல்கலை விடுதி மாணவிகள் ஆர்ப்பாட்டம்: தரமான உணவு வழங்க வலியுறுத்தல்
நெடும்பலம் அரசு விதை பண்ணையில் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மாப்பிள்ளை சம்பா நெற்கதிர் சாய்ந்தது
`ஸ்மார்ட் சிட்டி' புதிய கட்டுமான பணிக்காக பாளை. மார்க்கெட்டில் கடைகள் இடித்து அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!