வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்: ஜி.கே வாசன் கோரிக்கை
2022-08-10@ 14:52:29

சென்னை: வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை, அரசு காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றுப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் அதிகமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் வெள்ளநீர் புகுந்து பலநூறு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, காய்கறிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. கொள்ளிடம் அருகேயும், ஆற்றுப்படுகை அருகில் உள்ள மேலவாடி கிராமத்திலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.
அதிகமான பாதிப்பிற்குள்ளான பகுதிகள் நாதல்படுகை, பில்படுகை மற்றும் முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கிராமங்கள் ஆகும். இப்பகுதியில் தோட்ட பயிர்களான, மரவள்ளிகிழங்கு, முல்லை, மல்லி, சாமந்திபூ சாகுபடி செய்யப்படுகிறது, அவை தண்ணீரில் மூழ்கி முற்றிலும் அழுகிவிட்டது. மேலும் மாதர வேலூர் பகுதிகளில் செங்கல் காலவாய் தொழில் செய்து வருகின்றனர் இங்கு 50 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை தண்ணீர்சூழ்ந்து, சுடப்படாத செங்கல்கள் எல்லாம் நனைத்து கரைந்துபோய் அவர்களின் உழைப்பெல்லாம் வீணாகிவிட்டது.
ஆகவே தமிழக அரசு உடனடியாக வெள்ளநீர் வடிந்தவுடன் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கும், செங்கல் உற்பத்தியாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் உரிய இழப்பீடுகளை காலதாமதம் இல்லாமல் வழங்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் செய்திகள்
அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடியை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து வசூலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஜூன் 28ல் குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
தருமபுரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்!
புதுக்கோட்டை, விராலிமலை பகுதிகளுக்கு சேர்த்து புதிய கூட்டு குடிநீர் திட்டம் ரூ.547 கோடி நிதியில் தயாரிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
சென்னை, கோட்டை புறநகர் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி வாசகம் கருப்பு மையால் அழிப்பு: போலீசார் விசாரணை!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு