SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வலங்கைமான் பகுதியில் பெய்து வரும் மழையால் 2வது மகசூல் கிடைக்காமல் பருத்தி விளைச்சல் முடிவுற்றது-மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் ஏமாற்றம்

2022-08-10@ 12:57:01

வலங்கைமான் : வலங்கைமான் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பருத்தி இரண்டாவது மகசூல் கிடைக்காமலேயே முடிவுற்றது. முன்னதாக பருத்தி அதிக விலைக்கு விட்டதால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் இரண்டாவது மகசூல் கிடைக்காமலேயே முடிவுக்கு வந்ததால் ஏமாற்றமடைந்தனர்.

நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடியாக வலங்கைமான் மற்றும் ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, மருவத்தூர், மேலவிடையல் உள்ளிட்ட 71 வருவாய் கிராமங்களிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சித்தன், வாழூர், வேலூர், மாத்தூர், விளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் முறையே சுமார் 250 ஏக்கர் வீதம் பருத்தி சாகுபடி செய்யப்பட்டடுள்ளது. ஆண்டு தோறும சுமார் ஆயிரம் ஏக்கரில் கடந்த ஆண்டு வரை பருத்தி சாகுபடி செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது. மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரத்தின் உதவியுடன் மண் அணைத்தல் மண் கிளறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதால் பருத்தி சாகுபடி இந்த ஆண்டு கூடுதலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளை விட பருத்தி கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் பருத்தி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு வரை பருத்தி குவின்டால் அதிகபட்ச விலையாக ரூ.7000க்கு விலை போனது.

இந்நிலையில் இந்த ஆண்டு பருத்தி துவக்கத்திலேயே அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.பருத்தி குறைந்த பட்ச விலையாக குவின்டால் ரூ.7 ஆயிரத்து 500க்கும் அதிகபட்ச விலையாக குவின்டால் ரூ.12 ஆயிரத்திற்கும் சராசரி விலையாக குவிண்டால் ரூ.9500க்கும் விலை போனது. இதனால் பருத்தி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். பருத்தி பொதுவாக இரண்டு முறை மகசூல் தருவது வழக்கம். முதல் மகசூலில் பருத்தி ஏக்கருக்கு குறைந்த பட்சம் 9 குவிண்டால் அதிகபட்சம் 16 குவிண்டாலும் மகசூலாக கிடைக்கும். சராசரியாக ஏக்கருக்கு 12 குவிண்டால் மகசூல் கிடைப்பது வழக்கம்.

அதே போன்று இரண்டாவது மகசூலாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று குவிண்டாலும் அதிகபட்சமாக ஏழரை குவிண்டாலும் மகசூலாகக் கிடைக்கும். சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு இரண்டாவது மகசூலாக ஆறு குவிண்டால் வரை கிடைக்கும். பருத்தியில் முதல் மகசூல் கிடைத்து அதிக விலைக்கு விவசாயிகள் வெற்றி மகிழ்ச்சி அடைந்த தருணத்தில் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வழக்கமாக செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில் அதற்கு முன்பு வரை கடும் வரட்சி நிலவி வரும் இதன் காரணமாக இரண்டாவது மகசூல் கிடைப்பதில் எவ்வித சிரமமும் இல்லை.

ஆனால் தற்போது பெய்து வரும் மழையினால் பருத்தி மகசூல் மிகவும் பாதித்துள்ளது. பருத்திக்கு ஈரம் மட்டுமே தேவை. தண்ணீர் தேவையில்லை தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக பருத்தி வயல்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியதால் பருத்தி செடிகள் அழுகும் நிலையிலும் வளர்ச்சி வேகம் குறைந்தும் மகசூல் இல்லாமலும் உள்ளது.
பருத்தி அதே விலைக்கு விற்பனை செய்தால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் இரண்டாவது மகசூல் கிடைக்காமல் போனதை அடுத்து ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்