டோல்கேட்டில் தாமதம் தட்டிக் கேட்டவர் மீது சரமாரியாக தாக்குதல்
2022-08-10@ 03:03:42

திருமங்கலம்: மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்த பெண். கால்நடை மருத்துவர். உடல் நலக்குறைவு காரணமாக மகனுடன் நேற்று மதுரைக்கு காரில் சென்றார். திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டினை கடக்க முயன்ற போது, முன்னால் நின்ற கேரளா வாகனத்தால் செல்ல முடியவில்லை. கேரள வாகனத்திற்கான பாஸ்டேக் ஸ்கேன் ஆகாததால், நீண்டநேரம் தாமதமானது. இதனால், பொறுமை இழந்த டாக்டரின் மகன் காரினை விட்டு இறங்கி டோல்கேட் ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. டோல்கேட் ஊழியர்கள் டாக்டரின் மகனை சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க முயன்ற பெண் டாக்டரை காரினை விட்டு இறங்க விடாமல் ஊழியர்கள் தடுத்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் விலக்கி விட்ட பின்பு டாக்டரின் கார் டோல்கேட்டினை கடந்து சென்றது. இதுதொடர்பாக அந்த பெண் டாக்டர், ஒருவரிடம் பேசிய ஆடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, டோல்கேட் ஊழியர்கள், பெண் டாக்டரின் மகன் மீது போலீசில் புகாரளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!