மாவட்ட தலைவருக்கு கடும் எதிர்ப்பு ஆரணி பாஜவில் கோஷ்டி மோதல்: கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
2022-08-10@ 02:56:47

ஆரணி: பாஜ மாவட்ட தலைவரை கண்டித்து, ஆரணியில் நடந்த புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தை புறக்கணித்து அக்கட்சியினர் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜ சார்பில், ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பாஜ புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மால்பின் ஸ்ரீதரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி முன்னாள் நிர்வாகிகள் சிலர், மாவட்ட தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட தலைவரை கண்டித்தும் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் ஜெயகோபி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோபி, வேலு, முன்னாள் நகர தலைவர்கள் பழனி, நாராயணன் ஆகியோர் தலைமையில், திருமண மண்டபம் எதிரே கண்களில் கருப்பு துணியை கட்டி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாஜ நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. மூத்த நிர்வாகிகளுக்கு கட்சி சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சி குறித்தும் தகவல் தெரிவிப்பதில்லை. எங்களை மதிப்பதுமில்லை. மாற்று கட்சியில் இருந்த வந்துள்ள மாவட்ட தலைவர் அவரது சாதியினருக்கும், உறவினர்களுக்கும்தான் முன்னுரிமை கொடுத்து கட்சியில் பொறுப்பு கொடுத்து வருகிறார். அதேபோல், பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளிடம் பணம் கொடுத்தால்தான் புதிய பொறுப்பு வழங்க முடியும் என்கிறார். இதைகேட்டால், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி விடுகிறார். மாவட்ட தலைவர் தவறான செயல்பாடுகளை மாற்றி கொள்ள வேண்டும். இல்லை என்றால் மாவட்ட தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:
To the district head opposition protest BJP conflict demonstration மாவட்ட தலைவருக்கு எதிர்ப்பு ஆரணி பாஜ மோதல் ஆர்ப்பாட்டம்மேலும் செய்திகள்
பழைய பாலம் கடும் சேதம் பாம்பன் புதிய பாலத்தில் இனி ரயில்கள் இயங்கும்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்
வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநிலத்தவர்கள் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்: கிருஷ்ணகிரி எஸ்பி பேட்டி
தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் பழநி கோயிலில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்: பறவைக்காவடி எடுத்து வந்து பரவசம்
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தில் முதல் அதிரடி அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை: மலைக்கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும்திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் நேரில் ஆய்வு
வரும் 28ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்: பொதிகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் மதுரை, திண்டுக்கல் செல்லாது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!